பண்ணைவிளை கிராமம் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா பெருங்குளம் பஞ்சாயத்தில் அடங்கிய குக்கிராமம். ஆனால் இதன் பெயர் உலகளவில் பிரசித்தப்பெற்றது. இதற்கு காரணம் இங்கு வந்து மிஷனரிப்பணிகள் செய்திட்ட தக்கர் ஐயர் மற்றும் ஏமி கார்மிக்கல் அம்மையார் ஆகும்.
ஊரை சுற்றிலும் பனைமரம் நடுவில் அழகிய கிராமம். பண்ணைவிளையில் அனைவரும் பாமர மக்கள். பனையேறி குடி வாழ்ந்த இம்மக்களில் பெரும்பாலானோர் அத் தொழிலை விட்டுவிட்டு தற்சமயம் கொத்தனார்களாகி கட்டிடப்பணிகள் செய்கின்றனர்.
பண்ணைவிளை பங்களாவில் (வெள்ளைகாரர்கள் குடியேறிய பகுதி, மேல்நிலைப்பள்ளி மற்றும் கிறிஸ்து ஆலயம் இங்குள்ளது) 100 குடும்பங்களும் பண்ணைவிளையில் 210 குடும்பங்களும் பண்ணைவிளை புதூரில் 75 குடும்பங்களும் உள்ளன.
Thursday, January 8, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment